மிசோரி மாநிலத்தைச் சேர்ந்த ஜெமி நைப்பர் எனும் பெண்ணும் அவரின் மகளான அலிஸ் எனும் 3 வயது சிறுமியும் பொது நீச்சல் குளமொன்றில் நீந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் மின்னியதால் தடாகத்திலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு அங்கிருந்த ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
பலரும் தடாகத்திலிருந்து வெளியேறியபின் தனது மகள் அலிஸை காணவில்லை என்பதை ஜெமி உணர்ந்தார்.
பல நிமிட நேர தேடுதலுக்குப் பின், அலிஸ் மிதவையொன்றின் அடியில் கிடப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின் மேற்படி சிறுமி தூக்கிவரப்பட்டாள். அப்போது அச்சிறுமியின் இதயத்துடிப்பு நின்றிருந்தது.
ஆனால், அங்கிருந்த ஒருவர் இதயத்துடிப்பை மீள ஏற்படுத்துவதற்கான சி.பி.ஆர். சிகிச்சைகளை செய்தபோது அச்சிறுமியின் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.
அதையடுத்து அச்சிறுமி அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
இச்சிறுமி குணமடைவதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்த பலர் விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். 2 வாரங்களின் பின் இச்சிறுமி வீடு திரும்பினாள்.
இச்சிறுமி உயிர்தப்பிய விதம் வியப்பளிப் பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
பிரார்த்தனை, அதிஷ்டம் மற்றும் இறைவனின் அருள் ஆகியன இதில் முக்கிய பங்கு வகித்திருக் கலாம் என டாக்டர் ஜெரமி ஜெராரட் தெரிவித் துள்ளார்.