ஒன்பது வயது சிறுமி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச படக் காட்சிகளை காண்பித்த இளைஞனை கண்டி நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கண்டி அங்கும்புர பொலிஸ் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் சிறுமியை அழைத்துச் சென்று அயல் வீட்டு இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசி மூலம் ஆபாசப்படக் காட்சிகளை காண்பித்துக் கொண்டிருப்பதை அயலவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் சிறுமியை அழைத்துச் சென்று அயல் வீட்டு இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசி மூலம் ஆபாசப்படக் காட்சிகளை காண்பித்துக் கொண்டிருப்பதை அயலவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக அங்கும்புர பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை கைது செய்து கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றி பரிசீலித்த பின்னர் இளைஞனை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
நீதிவான் சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.