Advertisement

Main Ad

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிப்பும், விழிப்புணர்வுக் கூட்டமும்.


சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் கடற்கரைப் பிரதேசம் சுத்திகரிப்பும், விழிப்புணர்வுக் கூட்டமும். -சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீமும் பங்கேற்பு-

   

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் விழிப்புணர்வுக் கூட்டமும், கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாகச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம் பெற்றன.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமொன்று நிந்தவூர் கடற்கரைப் பூங்காவில் இடம் பெற்றது. இதில் கடற்கரைப் பிரதேசத்தை ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? அதன் அவசியம்? அதில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கரை? பொது மக்களின் பங்களிப்பு போன்ற பல விடயங்கள் தெறிவுபடுத்தப்பட்டன.

இவ்விழிப்புணர்வுக் கூட்டத்திலும், சிரமதான சுத்தப்படுத்தல்களிலும் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் பிரியலால், அம்பாரை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிலும் திலகரெட்ண, அம்பாரை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிசார், இராணுவத்தினர், சுற்றாடல் பாதுகாப்பு சபையினர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“கடந்த காலங்களில் சுத்தமான கடற்கரைப் பிரதேசத்தில் பிரதேச சபையினர் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டி, கடற்கரையின் அழகைக் கெடுத்தனர். அன்று அதனை எம்மால் தடுக்க முடியாதிருந்தது. ஆனால் இன்று எமது அதிமேதகு ஜனாதிபதியே அதனைத் தடுக்குமாறு கூறியுள்ளார்கள். இனிமக்கள் சுகமாக வாழலாம்” என சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீம்  இங்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.