கொழும்பு கோட்டை புகை யிரத நிலையத்தில் புகையிரதத் தில் ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்து விபத்துக்குள் ளானதில் இளவயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய ராகமை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.