நாட்டில் தான்தோன்aஸ்வரர் ஆலயங்கள் இரண்டு காணப்படு கின்றது. அவற்றுள் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு ஒட்டு சுட்டான் தான்தோன்aஸ்வரர் ஆலயம். மற்றைய ஆலயம் மட்டக்களப்பு மாவட்ட கொக்கட்டிச்சோலை தான் தோன்aஸ்வரர் ஆலயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வளம் கொழிக்கும் பிரதேசமாக இருக்கின்றது. வாவி, வயல், கடல், வனம் சூழ்ந்து தென்றல் காற்று தேனிசை பாடும் மாவட்டமாக வுள்ளது.
மட்டக்களப்பு நகரின் தெற்குத் திசையில் சுமார் பதின் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையை அடுத்து கொக்கட்டிச் சோலை என்னும் பழம்பதியுள்ளது. இது மட்டக்களப்பு மாநகருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இவ்வாலயம் கோபுர தரிசனம் உயர்வுற்று அமைந்துள்ளது.
கொக்கட்டி மரங்கள் செறிந்த சோலையாக இருந்த இடமாதலால் கொக்கட்டிச் சோலை எனும் பெயர் தோன்றலாயிற்று. கொக்கட்டி மரத்தின் கீழ் சுயம்பு வடிவமாக சிவன் எழுந்தருளியிருந்த மையினாலும், கொக்கட்டிச் சோலையில் தலம் அமைந்தமையினாலும் கொக்கட்டிச் சோலை தான் தோன்aஸ்வரர் ஆலயம் எனப் பெயர் கொள்ளலாயிற்று. இவ்வாலயம் மட்டுமே சிவன் கோயிலாக தனியிடச் சிறப்பை பெறுகின்றது.
இத்திருத்தலபதி தொன்று தொட்டு சைவமும், தமிழும் வீற்றிருந்த புண்ணிய பூமியாகும். சைவத்தையும் தமிழையும் வளர்த்த மேன்மை கொள்பதி. மிகு சைவத்துறை விளங்கும் புண்ணியத் தலமாகும். இத்தலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரேயொரு சிவன் கோயிலாகவும், தேரோடும் திருத்தலமாகவும் விளங்குகின்றது.
இவ்வாலய வரலாற்றுச் சிறப்பினை கல்வெட்டுக்கள், புராண வரலாற்று ஏடுகள், வரலாற்று நூல்கள், கர்ண பரம்பரைக் கதைகள், ஆகியன சிறப்புற எடுத்தியம்புகின்றன.
கலிங்க (ஓரிசா) தேசத்திலிருந்து வந்து மண்முனைப் பிரதேசத்தை அரசு ஆட்சி செய்து வந்தவளான கலிங்க தேசத்தரசன் குகசேனனுடைய புத்திரி உலக நாச்சியின் ஆட்சிக்காலத்தில் காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது. காடுகளை அழித்து கொண்டிருக்கும் அவ்வேளையில் வேடர்குல திடகன் என்பவன் கொக்கட்டி மரப்பொந்தொன்றில் தேன் இருப்பதைக் கண்டு கொக்கட்டி மரத்தை வெட்டினான். கொக்கட்டி மரத்தின் வெட்டுவாயில் இருந்து குருதி “குபீர் குபீர்” எனப் பாய்ந்தது. அதைக் கண்ட அவன் தனது உடையினால் வெட்டு வாயைக் கட்டிவிட்டு உலக நாச்சியிடம் செய்தியைக் கூறினான்.
உலக நாச்சியும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது மரத்தடியில் ஒரு இலிங்கம் இருந்தது. உலக நாச்சியார் அதனை சிவலிங்கம் என உணர்ந்து ஆலயம் அமைத்து வட நாட்டு கொல்லடத்திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்து பூசை பண்ணுவித்தாள்.
இச்சிவலிங்கம் பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே வழிபட்டு வந்த இலிங்கம் எனவும் அது கால ஓட்டத்தினால் மண்ணால் மூடப்பட்டதாகவும், தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாலயம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்றே நாம் அதன் காலத்தை நிர்ணயம் செய்யலாம். மேலும் இவ்வாலயம் குளக்கோட்டன், கலிங்கமாகோன், விமலதர்மசூரியன், விக்கிரம இராஜசிங்கன் முதலிய மன்னர் களால் பரிபாலிக்கப்பெற்ற ஆலயமாக திகழ்கின்றது.
திருவருள் நிலையென நாத்திகரும் தெளிந்துண்மை கண்டுனைத் தொழுதெழுவே திரு முன்னர் நின்றகல் ஆனேறும் தின்று புல் ஆசை போடச் செய்பரனே....!
ஒரு முதலே எல்லா மதங்களுக்கும் ஒளிதரும் எங்கள் தான்தோன்றியப்பா.... திரு நிறை தேவியும் நீயுமெங்கள் சிறுகுடில் தொறு மெழுந்தாண்டருளே.....”
என சிறப்புற்று விளங்கும் தான்தோன்aஸ்வரர் கிழக்கு நோக்கியதாக சிகர கோபுரத்துடன் அமைந்துள்ளது. உள் வீதியில் பிள்ளையார், அருணா லேஸ்வரர், விஷ்ணு, நாகதம்பிரான், முருகன், சண்டேஸ்வரர், வைரவர், நவக்கிரகங்கள் போன்றவற்றுடன், யாகசாலை, ஆகமசாலை, தீர்த்தக் கிணறு, நந்தி, பலிபீடங்கள், கொடித்தம்பம் என்பன உள்ளன.
இத்தான் தோன்aஸ்வரரின் அற்புதங்கள் ஏராளம். போர்த்துக் கேயர் ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை அழிக்கும் பொருட்டு போர்த்துக்கேய தளபதி தனது பரிவாரங் களுடன் வந்தடைந்து ஆலயத்திற்குள் நுழைந்தான்.
நுரைந்ததும் உள்ளிருந்த நந்தியை கண்ணுற்றான். ஆவேசத்துடன் அது என்ன? என்று கேட்டான். பீதியுடன் நின்ற குருக்கள் எம் பெருமானை வணங்கிய நிலையில் “நந்தி” என்றார்.
தளபதியோ “புல் தின்னுமா?” என்று கேட்டான். மொழி பெயர்ப்புக்காரனும் கேள்வியைக் கேட்டு உறுமினான். பயத்தினால் “ஆம்” என்றார். குருக்கள். தளபதியும் “கொடுபார்க்கலாம்” என்றான்.
குருக்களும் “இப்போதுதான் தின்றது. பசிவந்தால்தான் தின்னும்” என்றார்.
“சரி நாளை வருகின்றேன். நான் வரும் வரைக்கும் புல் கொடுக்காதே புல்லை வைத்திரு” எனக் கட்டளையிட்டு தளபதி சென்றான்.
குருக்கள் தன்நிலை அறிந்து சிவலிங்கப் பெருமானிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் துன்ப நிலையைப் போக்குமாறு மன்றாடி எம்பெருமான் முன்னிலையில் அசையாது தியானித்து நின்றார்.
அசரீரி வாக்கு “அஞ்சேல் அஞ்சேல்” என அங்கு நின்றோர் அறியும் படியாக எழுந்தது.
மறுநாள் வந்த தளபதி ஆலய குருக்களிடம் “புல்லைக்கொடு தின்பதைப் பார்ப்போம்” என்றான்.
குருக்கள் தன்னிடம் இருந்த அறுகம் புல்லைக் கொடுத்தார். என்ன அதிசயம்! கல்மாடு கம்பீரமாக எழுந்து நின்றது. கொடுத்த புல்லைத் தின்றது. தின்றது மட்டும் அல்லாது வாலை உயர்த்தி சாணமும் இட்டது. இக்காட்சியைக் கண்ட தளபதி வீழ்ந்து வணங்கினான். பக்தியுடன் வெளியேறினான். மற்றைய நாள் ஆலயத்திற்கு பெருநிதி வழங்கிச் சென்றான்.
தீராத நோய்கள் நீங்குகின்றன. ஆற்றொணா துன்பங்கள் நீங்குகின்றன. இவையெல்லாம் உண்மையான பக்தர்களுக்கு அவர் காட்டும் இன்னருளாகும்.
அவர் காட்டும் அற்புதங்கள் சொல்லில் அடங்காதவையாகும். இதற்கு ஈடாக அங்கப்பிரதட்சணை, மாவிளக்கேற்றல், கற்பூரச்சட்டி தலையில் ஏந்தல், காவடி எடுத்தல், வாய் அலகு இடுதல் போன்ற நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பக்தர்களை கணக்கிட முடியாது இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆவணி உத்தரத்தில் 14.09.2015 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பூரணையை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி தேரோட்டமாகவும் மறுநாள் திங்கட்கிழமை 28ம் திகதி தீர்த்தோற்சவமாகவும் கொண்ட பதினாறு நாட்கள் உற்சவம் நடைபெறுகின்றது. பூசைகள் யாவும் சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றன.