(க.கிஷாந்தன்)
மது
ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு
இலங்கையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம்
உத்தரவு பிறப்பித்துள்ள
போதிலும் உத்தரவை மீறி டிக்கோயா பிரதான நகரத்தில் “வெளிநாட்டு மதுபான
தவரணை” என்ற மதுபானசாலையில் இரகசியான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த
மேற்படி
வர்த்தக உரிமையாளர் 10.07.2015 அன்று பிற்பகல் அட்டன் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உரிமையாளர் மதுபானசாலைக்குள்
வாடிக்கையாளர்களை வரவழைத்து மதுபானம் விற்பனை செய்வதாக அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த
இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினர் சுற்றி வளைப்பினை
மேற்கொண்டு இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இதன் போது விற்பனைக்காக வைத்திருந்த
மதுபானங்களையும் அட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபரை அட்டன்
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
அட்டன் பொலிஸாரும், கலால் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.





