(க.கிஷாந்தன்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பிரதான தோட்டம் ஒன்றில் 09.07.2015 அன்று மாலை வேளையில் இருபது வயதுடைய யுவதி ஒருவர்
குளித்து கொண்டிருக்கும் போது கதவினை உடைத்து குறித்த யுவதியை பாலியல் வன்புறுத்தலுக்குள்ளாக்கபட்ட
திருமணம் முடித்த 27வயதுடைய நபர் ஒருவர் 09.07.2015 அன்று சந்தேகத்தின் பேரில் டயகம
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
அப்பிரதேசத்தில் மரண சடங்கு ஒன்று
இடம்பெற்றுள்ளது. மரண சடங்குக்கு சென்று மது பாவனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவரே இச்சம்பவத்தில்
ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்மந்தப்பட்ட யுவதி மண நோயாளி
எனவும் தெரியவந்துள்ளது.
மேற்படி யுவதி டயகம வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கும் டயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

