Advertisement

Main Ad

தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கைய கை விட்டு புற்கள் பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். ( PHOTOS )

(க.கிஷாந்தன்)
 

பெருந்தோட்ட பகுதியில் தொடர்ச்சியாக சம்பள உயர்வு கோரி மெதுவான பணி செய்யும் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 4 தொடக்கம் 5 வரை கிலோ கொழுந்தினை பறித்து வந்தார்கள். பறிக்கப்பட்ட கொழுந்து மடுவங்களிலும் தொழிற்சாலைக்கு முன்பாகவும் கொட்டப்பட்ட நிலையில் கருகி விநாகியுள்ளது.

இதன் காரணமாக 5வது நாளான 10.07.2015 அன்று தொடக்கம் மலையகத்தில் பல பாகங்களிலும் தோட்ட தொழிலாளர்கள் மெதுவான பணியில் தேயிலை மலையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தேயிலை மலைகள் தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்காத காரணத்தினால் அதிகமான தேயிலை மலைகள் புற்கள் வளர்ந்து காடாக காணப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தொடருமானால் தேயிலை செடிகள் விநாகும் என நினைத்த தோட்ட தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையை கை விட்டு தேயிலை செடிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு 5வது நாளகவும் தோட்ட தொழிலாளர்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

அந்தவகையில் நோர்வூட் எலிபடை தோட்ட தொழிலாளர்கள் 10.07.2015 அன்று காலை ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என கோரி தோட்டத்திற்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட கம்பனிகளுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்ததை இடம்பெறாததையொட்டி மலையக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.