( எஸ்.அஷ்ரப்கான் )
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் விஷேட மார்க்கச் சொற்பொழிவும் நேற்று (09) வியாழக் கிழமை கல்முனை திரு இருதய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
மூவின சமூகங்களும் கலந்து கொண்ட இந்த இப்தார் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளர் திரு துசித்த பி.வனிகசிங்க பிரதம அதிதியாக் கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.அமீர் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன்
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ அப்துல் ஹப்பார் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர்
டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



