(எஸ்.அஷ்ரப்கான்)


 அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் சாய்ந்தமருது கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  வருடாந்த மாபெரும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் (12) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஸீ பிறீஸ் உணவகத்தில் அமைப்பின் தலைவர் ஆசிரியர் அஷ்ரப்கான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.சம்சுல் முனா தெரிவித்தார்.

இந்த இப்தார் நிகழ்விற்கு பிரதான அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை தெற்குப் பிராந்திய அமைப்பாளருமான சந்திரதாஸ கலபதி அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை வர்த்தகர் எம்.எம். ஜமால்டீன், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் திட்ட தவிசாளரும், பிராந்திய உணவு மருந்து பரிசோதகருமான எஸ். தஸ்தகீர், பேரவையின் மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம். சுபைர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன தேசிய தலைவர் எம். உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச இணைப்புச் செயலாளர் ஏ.எச்.சிறாஜ் அஹமட் உட்பட அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வின்போது 50 பேருக்கு சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ இன் எதிர்கால நிரந்தர உறுப்பினர்களாக நியமனங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.