Advertisement

Main Ad

மலையக மக்களின் வாழ்க்கை நிலை பணி நிறுத்த போராட்டம் காரணமாக ஸ்தம்பிதம் சம்பள உயர்வு

(க.கிஷாந்தன்)
 
மலையக மக்களின் வாழ்க்கை நிலை பணி நிறுத்த போராட்டம் காரணமாக ஸ்தம்பிதம் சம்பள உயர்வு வேண்டி பெருந்தோட்ட மக்கள் எடுத்து வரும் மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்ட மக்கள் (09.07.2015) அன்று பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் போது பெரும் திரளான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இங்கு மக்கள் நாள் ஒன்றுக்கு தங்களுக்கு 1000 ரூபா சம்பளம் வேண்டி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டதுடன் அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகள் உடனடியாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
மலையக தோட்டங்கள் தோறும் பணி நிறுத்தம் இடம்பெருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. தோட்டங்கள் தோறும் சோகமயமாக காணப்படுகின்றது.
தோட்ட நிர்வாகமும் தனது நடவடிக்கைகளில் இருந்து விழகியுள்ளதால் மெதுவாக வேலை செய்யும் வேலையின் போது பறிக்கப்டும் பல இலட்ச பெருமதியான கொழுந்துக்கள் கைவிடப்பட்ட நிலையில் தோட்டங்களில் அழுகி நாற்றமெடுக்கும் நிலையில் காணப்படுகின்றது.