(க.கிஷாந்தன்)
ஐக்கிய
தேசிய கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 9 பேர் இம்முறை
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி
தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி விடுத்திருக்கும்
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
தமிழ்
முற்போக்கு கூட்டணி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின்
யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. எமது கூட்டணி சார்பாக
நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக
9 பேர் போட்டியிடுகின்றனர். கூட்டணி வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின்
தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் (10.07.2015) அன்று வேட்பு மனுவில்
கையொப்பமிட்டுள்ளனர்.
நுவரெலியா
மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக
மக்கள் முன்னணி தலைவர் வீ.ராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய முன்னணியின்
பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் ஆகியோரும், கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள்
முன்னணி உபதலைவர் வேலுக்குமார், பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி
நிதிச் செயலாளர் ஏ.அரவிந்குமார் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள்
முன்னணியினதும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தலைவர் மனோகணேசன், ஜனநாயக
மக்கள் முன்னணி உப செயலாளர் சண்.குகவரதன் ஆகியோரும் இரத்தினபுரி
மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி இரத்தினபுரி மாவட்ட செயலாளர்
எம்.சந்திரகுமார் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி
கம்பஹா மாவட்ட செயலாளார் எஸ.சசிகுமார ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுவில்
கையொப்பம இட்டதன் பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணி செற்குழு கூட்டம்
நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலான
தேர்தல் நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள இடம்பெற்றதாகவும் தமழ்
முற்போக்கு கூட்டணியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.









