|
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்தும் எம். ஐ. எம். சமின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுபோட்டியின் இரண்டாவதுஅரைஇறுதி போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) இடம்பெற்ற இப்போட்டியில் கல்முனை பிர்லியன்கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் கழகம் மோதியது. 2- 3என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் கழகம் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் லியாகத் அலி அவர்களும் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அட்டாளைச் சேனை கல்வியியல் கல்லுாரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் சனிமௌன்ட் விளையாட்டுக்கழக செயலாளர் எம்.ஐ.எம். மனாப் ஆகியோரும் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளின் இறுதிப்போட்டி நாளை (12) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதுடன் இதற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வரும் சட்ட முதுமானியுமான நிஸாம் காரியப்பர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக சனிமௌன்ட் விளையாட்டுக்கழக செயலாளர் எம்.ஐ.எம். மனாப் தெரிவித்தார்.



