|
நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை “நீலோத்பலம்” என பெயர் மாற்றஅமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (11) கொழும்பில் இடம்பெற்றது. இதில் தேசிய மலர் தொடர்பான தீர்மானம்பின்வருமாறு அமைந்திருந்தது.
பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் எமது நாட்டின் தேசிய மலர்“நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த மலர் கடந்த காலங்களில் சரியான முறையில் பயன்படுத்தப்படாமையினால் ஏற்பட்டுள்ளநெருக்கடியினை அடிப்படையாக வைத்து இலங்கையின் தேசிய மலர் சிங்கள மொழியில் “மானெல்” எனவும் தமிழ் மொழியில் “நீலோத்பலம்” எனவும்ஆங்கிளத்தில் “Blue Water Lily” எனவும் அழைப்பதற்கும், தேசிய கொடி காட்சிப்படுத்தப்படும் போது அதன் சரியான உருவமும், அதன் விஞ்ஞான பெயரும்காட்சிப்படுத்துவதற்கும், தேசிய கொடியின் சரியான பெயர், அதன் சரியான உருவம் ஆகியவை தொடர்பில் போதுமான அளவு பிரசாரம் ஒன்றைமேற்கொள்வதற்கும் மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டஅமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

