|
அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக உள்வாங்கப்படும் மாணவர்களின்எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் 2007ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள் ளதாககல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான சுற்று நிருபம் நேற்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இந்த சுற்று நிருபத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா வது,அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35மாணவர்களே இருக்கவேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பிற்காக 28 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். இதில் அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்பவர்களில் இரண்டு மாணவர்களும் பாதுகாப்பு துறை சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் 5 பேரும் என மொத்தமாக 35 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.
பாடசாலையை அண்மித்து வசிப்பவர்களில் 50 வீதத்திலானோரும் பாடசாலையின் பழைய மாணவரின் பிள்ளைகள் என்ற விதத்தில் 25 வீதத்தினரும் பாடசாலை மாணவர்களின் சகோதரர்கள் என்ற அடிப்படையில் 15 வீதத்தினரும் கல்வி அமைச்சுடன் தொடர்புடையதாக இயங்கும் காரியாலயங்களில் தொழில் புரிவோரின் பிள்ளைகள் 05 வீதத்தினரும் இணைத்துக்கொள்ளப்படுவர்.
அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் மாணவர்களை அனுமதிக்கும் போதும் பாடசாலை அபிவிருத்திச்சங்க பணம், சேவைக் கட்டணம் தவிர்ந்த ஏனைய கட்டணங்கள் எவையும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

