(முஹம்மது ஜெலீல், நிந்தவூர் )
எமதூர் நிந்தவூர் ஜனாஸா வாகனத்தேவையை பூர்த்தி செய்யும் முகமாகக் மேற்கொள்ளப்பட்ட நன்கொடை நிதி மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தின் அளவைக் கொண்டு சிறந்த வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு கடந்த 4வருடங்களாக 125 க்கும் மேற்பட்ட ஜனாஸாவை அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரும் சேவையை செய்துவருகின்;றோம். அல்ஹம்துலில்லாஹி ;
ஆனால் கடந்த 4 மாதங்களாக ஜனாஸா வாகன பராமரிப்பு குழு பாரிய பிரச்சிளைகளையும் சவால்களையும் சந்தித்து கொண்டுவருகினறது. குறிப்பாக கடந்த 4 வருடங்களாக ஜனாஸா வாகன பராமரிப்பு ஜனாஸாக்களை ஏற்றுவதன்மூலம் எமது சகோதரர்கள் மன நிறைவுடன் வழங்கும் சிறிய நன்கொடைகள் மூலமாகவே நிவர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் பராமரிப்பு நிதியில் ரூபா.7610.00 நிதியே மிகுதியாகவுள்ளது.
மேலும் ஆரம்ப நன்கொடை நிதி வசூலிப்பு மற்றும்; எமது ஜூம்மாப் பள்ளிவாசல் மூலமும் கிடைக்கப்பெற்ற பணத்தின் அளவைக் கொண்டு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தோம். தற்போது அதன் இயந்திர(இஞ்சின்) இயங்கும் திறன் 70 வீதம் உள்ளதாக வாகண திருத்துனர்கள் எமக்கு முற்கூட்டி செல்லுகிறார்கள். ஆகவே எந்நோரத்திலும் தயார் நிலையில் இருக்க வோண்டிய வாகனத்தின் இயந்திரம் மற்றும் ஏனைய வோலைப்பாடுளை அவசரமாக திருத்த வோண்டிய இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுயிருக்கின்றோம்.
ஜனாஸா வாகனம் எமது ஊரின் சொத்து. எமது மக்களின் சொத்து. அதனை சீர் செய்வது எமது கடமை என்ற தூய நோக்கில் அடிப்படையில் நிதி வழங்க முன்வருவோம். நபி மொழியை பின்பற்றிடுவோம்.
உக்பா பின் நாபிஃ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் 'மறுமையில் ஒவ்வொரு மனிதனும் அவரவர் செய்த தர்மத்தின் நிழலிலே இருப்பான.;' (ஆதாரம் :- முஸ்லிம்)
எமது சகோதரர்கள் 2 கட்டங்களாக நிதி வசூலிப்பில் ஈடுபடவுள்ளனர்.
01. 2015.06.12 ம் திகதி வெள்ளிக்கிழமை எமதூரில் காணப்படும் 3 ஜூம்மாப் பள்ளிவாசல்களின் நுழைவாயல்களில் உண்டியல்கள் வைக்;கப்படும். ஜூம்மா தொழகைக்கு வரும் போது தங்களது நன்கொடைகளை அதில் இடமுடியும்.
02. எதிர் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது வீடுகளுக்கு ஒலி பெருக்கி அறிவிப்புடன் எங்களது சகோதரர்கள் உண்டியல்களுடன் வருகை தருவார்கள். அதில் தங்களால் முடிந்த பணத்தினை வழங்கி நன்மையினை பெற்றுக் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட முறையில் நிதி வழங்க விரும்புவோர் பின்வரும் தொடர்பு இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்கின்ற போது தங்களது வீடுகளுக்கு நாங்கள் சமூகம் தரமுடியும். மேலும் பின்வரும் வங்கி கணக்கிற்கு நிதியினை வைப்பு செய்யவும் முயும்.
தொடர்பு இலக்கம் : 0776526037, 0779694098, 0779114641, 0771617291, 0772635548.வங்கி இலக்கம் :
Name: Islamic Social Welfare Awakening Association (ISWAA)
Account No: Current Account – 296-1001-30000517
Name of bank: Peoples bank – Nintavur branch.
Name: Islamic Social Welfare Awakening Association (ISWAA)
Account No: Current Account – 296-1001-30000517
Name of bank: Peoples bank – Nintavur branch.
இவ்வண்ணம்; ஜனாஸா வாகன பராமரிப்பு பிரிவு இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பு - நிந்தவூர்.

