-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் முகமலர்ந்து பாராட்டும் முப்பெரு விழாக்கள் நேற்று இடம்பெற்றன.

வித்தியாலய அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம் பெற்ற இம்முப்பெருவிழாக்களில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஏ.எஸ்.ஏ.கியாஸ், எம்.எச்.எம்.பாறூக், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ,ஏ.சலீம், உளவளத்துணை இணைப்பாளர் எம்.ஏ.சபூர்த்தம்பி, முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.றசூல், வலயக் கல்விக் காரியாலய கணக்காளர் ஏ.எச்.தஸ்தக்கீர்,; உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய ரீதிகளில் பாடசாலைக்குப் புகழ் சேர்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலையின் கல்வி, பௌதீக வளர்ச்சிக்கு உதவிய அமைச்சர், கல்வி அதிகாரிகள், கல்விமான்கள் போன்றோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதே வேளை அமைச்சர் மன்சூரின் நிதிஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பாடசாலையின் உள்ளக வீதியும், வடிகானும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அமைச்சர் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்: “ கல்வி கற்றுக் கொண்டிருக்கும் எல்லா மாணவர்களையும் நாம் சரி சமனாகப் பயணிக்கச் செய்ய வேண்டும். போட்டி நிறைந்த உலகத்திலே கற்றலுக்கும், வளப்பற்றாக் குறைக்கும் மத்தியிலே இவர்களை நாங்கள் ஆளாக்க வேண்டும். போட்டி, பொறாமை, கஷ்டம், வறுமை, வளப்பற்றாக்குறை இவைகளெல்லாம் இருக்கத்தக்கதாக, மாணவர்களை நாங்கள் நல்ல தலைவர்களாக, அறிஞர்களாக, கல்விமான்களாக மாற்ற வேண்டும். இது தான் எங்களுக்கு இருக்கின்ற சவால்” எனத் தெரிவித்தார்.
இங்கு மாகாண அமைச்சர் மன்சூர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.ஏ.கியாஸ், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.றசூல், பல்துறை சாதனை படைத்த மாணவர்கள் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கண்கவர் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.






