Advertisement

Main Ad

மாளிகைக்காடு மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் ( படங்கள் இணைப்பு )




Mohamed Jafeer Mahroof



மாளிகைக்காடு மண்ணின் மைந்தர்களுக்கு மகுடம் சூட்டி கௌரவிக்கும் நிகழ்வும்,  மாளிகா சிறப்பு மலர் வெளியீட்டு விழா இன்று  வெள்ளிக்கிழமை மாலை  மாளிகைக்காடு அல்-ஹசைன் வித்தியாலய சதுக்கத்தில் மாளிகா அபிவிருத்திச் சபையின் தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த்;, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஓய்வுபெற்ற கல்வியியலாளர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்-இய்யதுல் உலமா சபை தலைவர் யு.எல்.எம்.காசிம்(கியாதி), காரைதீவு பிரதேச சபை செயலாளர் எஸ்.நாகராஜா, அல்-{ஹசைன் வித்தியாலய அதிபர் ஏ.சீ.எம்.நதீர், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள்;, மாணவர்கள், பெற்றோர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த.சாதாரண தரத்தில் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்கள் , அரபுக் கலாசாலைகளில் கல்வி கற்று அல்-ஹாபில் மற்றும் அல்-ஆலிம் பட்டங்களைப் பெற்ற மாணவர்கள், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிவாசல் பணிகளில் நீண்டகாலம் சேவையாற்றியவர்களுக்கு  நினைவுச்சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மாளிகா அபிவிருத்திச் சபையினால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அவர்கள் பொன்னடை போத்தி கௌரவிக்கப்பட்டனர்.