
இன்று வட மாகாணத்தில் முஸ்லிம்களினை குடியேற்றுவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதனை யாவரும் அறிவர்.இதனைக் கையாளும் முகமாக ஜனாதிபதி இற்கு அழுத்தங்களினைப் பிரயோக்கிக்கும் பொருட்டு நலன் விரும்பிகளினால் நாடு முழுவதும் இரண்டு இலட்சம் கையெழுத்துக்களினை சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து முசலிஇமன்னார் போன்ற இடங்களில் இக் கையெழுத்து வேட்டை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாணத்தில் இன்று (12.06.2015) ஜும்மாத் தொளுகையினைத் தொடர்ந்து நடாத்த முடிவு செய்யப்பட்டது.இவ் இவ் கையெழுத்து வேட்டையில் தங்களது பங்களிப்புக்களினையும் வழங்கும் நோக்கோடு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் இணைப்பாளர் அகமட் லெப்பை முக்தார் (ஜஹான்) தலைமையில் இன்று ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்களும்இமுன்னாள் கல்முனை மேயரும் அ.இ.ம.கா இன் தேசிய பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்களும்இகட்சி ஆதரவாளர்களும் தங்களது உயர்ந்த பங்களிப்பினை வழங்கி இருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை



