Advertisement

Main Ad

நான் ஒருபோதும் முஸ்லீம், தமிழ் சிங்கள என்று இனத்துவ சாயம் பூசி அரசியல் செய்யவில்லை - பைசர் முஸ்தபா

அஸ்ரப் ஏ சமத்
 
முண்னாள் பிரதியமைசச்ர் பைசர் முஸ்தபா இன்று மு.பகல் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அழுவலகலத்தை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இம் மாநாட்டில் அவர் தெரிவத்த கருத்து -  நாண்  கடந்த 9 வருடகாலமாக  பிரதியமைச்சராக சேவையாற்றி வந்தேன்.    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சையும், கோட்டாபாய ராஜபக்சவும் ஒருபோதும் எனது தணிப்பட்டமுறையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஆதனால்தான் தான் எனக்கு கடந்த சில நாற்கள் தீர்மாணம் எடுப்பதில்  தாமதம் ஏற்பட்டது.

மைத்திரிபால  சிறிசேனாவின்   நெருங்கி பழகியிருக்கின்றேன். அவரது தணிப்பட்ட வழக்குகளிலும், கட்சி வழக்குகளிலும் நான் ஆஜராகியிருக்கின்றேன்.

நான் அரசியல் ரீதியாக சிந்தித்தும்,  மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபணத்திற்கு அமையவே அவரை ஆதரிப்பதற்கு தீர்மாணித்தேன்.
நான் இன்றும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியில்தான் இருக்கின்றேன். நான் எதிர்காலத்தில கொழும்பிலா கண்டியிலா என்பது இன்று பிரச்சினை அல்ல நான் தற்போhது இந்த எஞ்சிய திணங்களில் மைத்திரிபாலவோடு இணைந்து அவரது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.

நான் ஒருபோதும் முஸ்லீம், தமிழ் சிங்கள என்று இனத்துவ சாயம் பூசி அரசியல் செய்யவில்லை நான் ஒர் இலங்கையன் சகல இன மக்களுக்கும் நான்  சேவை செய்யவேண்டும் அதனையே நான் கடந்த 9 ஆண்டுகள் செய்தவந்தேன். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எனக்கு 65வீதமான சிஙகள வாக்குகள் கிடைத்த ஒரு முஸ்லீம்.  நான் ஒருபோதும் அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ தூசித்து பிரச்சாரம் செய்யவில்லை. அவர்களை கௌரவமாகவே நடத்துவேன். ஏன பைசர் முஸ்தபா தெரிவித்தார்.