-அஷ்ரப் ஏ சமத்-
ஜே வீ பி நியூஸ் www.jvpnews.com
எனும் பெயரில் இயங்கிவரும் இணையதளத்துக்கும் தங்கள் கட்சிக்கும் எதுவித
தொடர்பும் இல்லை மேற்குறிப்பட்ட இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கு
தமது கட்சி பொறுப்பேற்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார
செயலாளரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.
இது
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஜே வீ பி நியூஸ் எனும்
பெயரில் முகவரி ஏதும் இல்லாதவர்களால் ஒரு இணையதளம் இயங்கப்பட்டு
வருவதாகவும் குறித்த இணையத்தளத்தில் பொய் பிரசரங்கள் மற்றும் ஆதரமற்ற
செய்திகள் பிரசுரிக்கப்படுவதாகவும் தங்
கள் கட்சிக்கு முறைப்பாடுகள்
கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இணைதளம் மக்கள் விடுதலை
முன்னணியின் இணையதளம் அல்ல எனவும் இவ்வினையதளத்துக்கும் தங்கள் கட்சிக்கும்
எதுவிதமான தொடர்புகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த
இணையதளம் தொடர்பாக இலங்கை ஊடக அமைச்சுக்கு தமது கட்சி முறைப்பாடு ஒன்றினை
வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்அண்மையில் ஊகங்கள்
அடிப்படையில் சில செய்திகளை இந்த முகவரியில்லாத இணையதளம்
வெளியிட்டுள்ளதாகவும் அது மக்கள் விடுதலை முன்னணியின் நற்பெயருக்கு களங்கம்
ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின்
பிரச்சார செயலாளரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ இணையதளம் www.jvpsrilanka.com எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

