Advertisement

Main Ad

அக்கரைப்பற்றில் தேர்தல் வன்முறை ஆரம்பம் ( படங்கள்)



முஸ்லிம் காங்கிரசின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானத்தினைத் தொடர்ந்து பட்டாசு கொளுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஏ.எல் தவம் அவர்களினது வலது கரங்களான எம்.எம் ஹாரூன் ஆசிரியர், சுகாதார பரிசோதகர் ஜாபிர் அவர்களினது வீடுகள் அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கோ மு.கா ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் கல் வீச்சுக்களும் நேற்று இடம் பெற்றுள்ளது.

அமைச்சர் அதாவுல்லா இன் கோட்டை அக்கரைப்பற்று  அவரின் கருத்திற்கு உடன்படாது முஸ்லிம் காங்கிரசினை  சாரும் நிலைமை தோன்றி இருப்பதே இவ் வன்முறைக்கான பிரதான காரணம் எனலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்