Advertisement

Main Ad

மு.காவின் வெளியேற்றமே மஹிந்தவுக்கான வெற்றியாகும் - மாகாண அமைச்சர் உதுமாலெப்பை




பைஷல் இஸ்மாயில்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்டத்தின்  உஹண பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட வீரக்கொட கிராம மக்களுக்கு வாழ்வாதாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும்  அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளை கண்டுள்ளதோடு  எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவைத்துள்ளார்.

அவரை நாம் மறக்கக்கூடாது. மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழ்க்கைத்தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும்  நாம் அவருடனேயே இருப்போம். கடந்த காலத்தில் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது. கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல்  வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி  வெளிநாட்டுச் சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றன. இதை ஒருபோதும் மக்கள் அங்கிகரிக்கமாட்டார்கள். இன்று மக்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே உள்ளார்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக  செயற்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவேண்டும்' என்றார்.