அஷ்ரப் ஏ சமத்
எதிர்வரும்
வரும் எட்டாம் திகதி இந்த நாட்டில் வாழும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு
எதிராக வாக்களித்து அவரையும் அவரை சூழவுள்ள திருட்டு கும்பலையும்
வீட்டுக்கு அனுப்ப தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாம் பல
புரட்சிகள் செய்து பலர் இரத்தம் சிந்தவேண்டிவரும் என மேல் மாகாண சபை
உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
இன்று
கொழும்பு வனாதமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்
கருத்துவெளியிட்ட அவர் முன்றாவது முறையாக மஹிந்த ஜனாதிபதி வரம்
கேட்கின்றார் அதற்கான ஆணையை மக்கள் வழங்கினால் இந்த நாட்டில் சர்வதிகாரம்
தலைவிரித்தாடும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவார்கள் அண்ணன் தம்பி மகன்
என ஒருவர் பின் ஒருவர் ஆட்சி செய்வார்கள். சர்வதிகார ஆட்சியில் இருந்து
நாட்டை மீட்டெடுக்க நாம் புரட்சி செய்ய வேண்டிவரும் மக்கள் இரத்தம்
சிந்தவேண்டிவரும் பல உயிர்களை பலி கொடுக்கவேண்டிவரும் என குறிப்பிட்ட அவர்.
இன்று
நாட்டை அபிவிருத்தி செய்துவிட்டதாக கூறும் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கடாபி
போன்றோரை விடவா நாட்டை அபிவிருத்தி செய்துள்ளார்.அவர்களுக்கு கடைசியாக
நடந்த கதி என்ன மக்களுக்கு அபிவிருத்தியை மட்டும் கொடுத்து போதாது
அவர்களுடைய சுதந்திரத்தை ஜனநாயகத்தை பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் மக்கள்
அதனை பலவந்தமாக பெற்றுக்கொள்வர் என குறிப்பிட்டார்.
வரும் எட்டாம் திகதி நாம் மைத்ரிக்கு வழங்கும் புள்ளடி சர்வதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் என அவர் குறிப்பிட்டார்.