Advertisement

Main Ad

(வீடியோ) முஸ்லிமுடைய பெயர் இருப்பதனால் விமான நிலையத்தில் பாஸ்போட்டை கையில் எடுத்து விடுகின்றனர். - பைரூஸ் ஹாஜி…

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்  கொழும்பிலிருந்து..



நாட்டில் இந்த அரசாங்கத்தின் ஆட்ச்சியின் கீழ் முஸ்லிம்களின் வியாபாரமும்  ஏனையா கொடுக்கள் வாங்கள் விடயங்களும் மறைமுகாமாகவும்  நேரடியாகவும் தொடர்ந்தேர்ச்சியாக முடக்கப்பட்டுக் கொண்டே வருக்கின்றது. இதன் உச்ச கட்டமாக விமான நிலையத்தில் பாஸ்போட்டில் முஸ்ல்லிமுடைய பெயர் இருக்குமாயின் உடநடியாக அந்த பாஸ்போட் அதிகாரிகளின் கையில் எடுக்கப்பட்டு தீவிர விசாரனைக்கும்  புலனாய்வுகளுக்கும் உட்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நேற்று வெள்ளிக் கிழமை (26.12.2014) தெமட்டகொடை ரீசேர்வையர் வீதியில் இடம்பெற்ற மைத்திரிபாலவின் வெற்றியை உறுதிசெய்யும் பொதுக் கூட்டத்தில் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளரும்  மேல் மாகன சபை உறுப்பினறுமான பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாசித் தலைமையில் இடம்பெற்ற இப்துக்கூட்டத்தில் நவசமாஜ கட்ச்சியின் தலைவர் விக்ரமபாகு கருனாரத்ன, ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பாரளமன்ற உறுப்பினர்களான றோசி சேனாநாயக்க, கிரான் விக்ரதுங்க, கொழும்பு மாநகர சபையின் மேயர் எம்.ஜே.எம்.முஸம்மில்,, மாநக நகர சபை உறுப்பினர்களான செராஃப் டீன், எம்.எச்.எம்.நெளபர் ஆகியோர்களின் பேச்சினை கேட்பதற்காக தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கின்ற அனேகமன மக்கள் பிரசன்னமாயிருந்தனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து உரையாற்றிய பைரூஸ் ஹாஜி… 
இக்காலகட்டத்தில் முஸ்லிம் வியாபரிகள் தங்களது சொந்த பெயரில் கம்பனிகள் ஆரம்பித்து வியாபாரம் செய்யமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் வியாபாரியினுடைய பெயரில் கெண்டைனர்கள் துறைமுகத்துக்கு வருமாயின் அவைகள் முற்றாக முடக்கப்படுகின்றன அல்லது திருப்பி அனுப்பப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காரணங்கள் சோடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இவைகள் அனைத்த்தும் நிறுத்தப்படடு இந்த நாட்டில் முஸ்லிம்கள் தங்களுடைய வியாபாரம்களை சுமுகமான முறையில் மேற்கொள்வதற்கு வருகின்ற எட்டாம் திகதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அமோக வெற்றியடையச் செய்து ஜனாதிபதியாக்குவதே ஒரே வழியாகும் என தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய  பாரளமன்ற உறுப்பினர் றோசி சேனாநாயக்க 
 நாட்டில் புதையுண்டு போயிருக்கும் பெண்களின் உரிமைகளைப் பற்றி விளாவாரியாக விளக்கியதோடு  இந்த நாட்டில் எமது பிள்ளைகளினுடைய சுதந்திர, இலவச கல்வி நடவடிக்கைகள் கீழ்மட்டத்துகுச் சென்று கொண்டிருக்கின்றது. எமது நாட்டில் இருக்கின்ற முக்கிய சொத்தாகத்தான் எமது பிள்ளைச் செல்வங்களை அரசாங்கமனது கருத்தில் கொள்ள வேண்டும். கொங்றீட் யுகத்தை உருவாக்குவதால் ஒரு போதும் நாடு அபிவிருத்தியடையாது. அதனால்எமது நாடு ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகவும் மாற்றமடையாது. இதன் மூலமாக அனைத்து கொந்துராத்துக்களையும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் கைப்பற்றி உச்ச இலாபத்தினை அடைந்தவர்களாக தங்களுடைய பிள்ளைகளை மட்டும் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்களுக்காக அனுப்பும் போதுஇ நாட்டில் அவர்களுக்காக வாக்களித்த மக்களின் பிள்ளைகள் கல்விகற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

முன்று இலட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகள் ஒவ்வொரு வருடமும் பாடசாலைகளில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்களில் 20000 பேர்கள் மட்டுமே உயர் கல்விக்காக பல்கலைக் கழகம் செல்கின்றனர். மீதமாய் இருக்கும் எமது பிள்ளைகளின் நிலைமை கேள்விக்குறியாக எமது நாட்டில் இருக்கின்றது. இந்த நிலைமை உடநடியாக மாற்றமைய வேண்டும். பல்கலைக் கழகங்கள் சுயமான முறையில் இயங்குவதற்க்கு அரசாங்கம் தடையாக உள்ளது. பல்களைக்கழக மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாணவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போது மிளேச்சத்தனமாக தாக்கப்படுக்கின்றார்கள்.

எமது வெற்றிக்குப் பிற்பாடு எமது ஜனாதிபதியான மைத்திரிபாலவின் ஆட்ச்சியில் உயர் கல்வி அமைச்சினால் பறிக்கப்பட்ட பல்கலை கழகத்தின் அதிகாரம் பல்கலைகழக மாணிய ஆணைக்குழு ஊடாக மீண்டும் பல்கலை கழகத்துக்கு வழங்கி அரசியல் மயப்படுத்தலுகுள்ளான பல்கலை கழகங்களை அதிலிருந்து விடுவிப்பதோடு  கல்விப் பொதுத்தராதரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தியடையும் சகலருக்கும் உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு வரை கல்வி பயிலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

வீடியோ : 01  - 


youtube.com/watch?v=C5psOZg5kd4

வீடியோ :02 - 



youtube.com/watch?v=mTfgobKO74o