Advertisement

Main Ad

உள்ளூராட்சி சபைகளுக்கு 2016 மார்ச்சில் தேர்தல்



உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போடவேண்டிய தேவை இல்லையெனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் மார்ச் மாதம் இத்தேர்தல்களை நடத்தவிருப்பதாகவும் கூறினார். உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான தேவை ஏற்படவில்லை. உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய உறுப்பினர்களே தேவைப்படுகின்றனர். கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை முகாமைத்துவ நிறுவனத்தால் நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
எதிர்வரும் இரண்டு வருடங்களில் முழுமையான ஜனநாயக சமூகமொன்றை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான கடமை. எமது நாடு துடிப்பான ஜனநாயக சமூகத்தைக் கொண்டிருந்தது. சில சமயங்களில் கடந்த தசாப்தத்தில் கட்சி அரசியல் தீவிரப்போக்கை எட்டியது.
இதனால் மக்களும், நீதித்துறை, பாராளுமன்றம் உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் தனது பொருளாதாரக் கொள்கை யையும் வரவுசெலவுத் திட்டத்தையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடவிருப்பதுடன், இரண்டு வருடங்களில் முழுமையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்றும் கூறினார்.
புதிய அரசியலமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் இணங்கியுள்ளன. தற்பொழுது உள்ள கட்டமை ப்பின் கீழ் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரங் களை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதே எமக்குக் காணப்படும் இரண்டாவது சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் உள்ளன. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைந்துள்ளன. பல்வேறு விடயங்களை விவாதிக்காமல் தவிர்ப்பதற்கு யுத்தம் ஒரு காரணமாக அமைந்தது. பாராளு மன்றத்தை பலப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தைப் போன்றதொன்றை அமைப்பதற்கான மேற்பார்வைக் குழுவொன்றை முன்மொழிய வுள்ளோம்.
பொது நிதியைக் கட்டுப்படுத்துவது பாராளுமன்றத்தின் கடமை என்பதால் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் அமைக்கப்படவுள்ளது” என்றும் பிரதமர் தனது உரையின்போது தெரிவித்தார்.
ஜயவர்த்தன நிலையம் பாராளுமன்றத் துக்கான ஆய்வுகள் மற்றும் பயிற்சி நிலையமாக மாற்றப்படவிருப்பதுடன், விவசாயத்துறை அமைச்சு செத்சிறி பாயவுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் அமைச் சரவையால் பொறுப்பேற்கப்படவேண்டும். இலங்கையின் நீதித்துறை பலமாக வேண்டும். பிரதம நீதியரசராகவிருந்த ஷிரானி பண்டாரநாயக்கவை நீக்குவதற்கு வழிவகுத்த நீதித்துறை மாற்றப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும்.
“ஐ.நா பிரேரணையில் முன்வைக்கப் பட்ட குற்றச்சாட்டு இராணுவத்துக்கு எதிரானது அல்ல மாறாக நீதித்துறைக்கு எதிரானதே. உள்ளகப் பொறிமுறை யொன்றின் ஊடாக இதனை சாதகமாக்க முடியும்.
உண்மை மற்றும் நல்லிணக்கத்தை சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதே உள்ளகப் பொறிமுறையின் பிரதான நோக்கமாகும்” என்றும் கூறினார்.
உண்மைகள் கண்டறியப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கவேண்டும்.
இதற்கான நடவடிக் கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதில் சகலரும் இணங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.