முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக மிரிஹானையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பபட்ட பிரச்சார விளம்பரங்கள் தொடர்பில் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.