-பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி-
கல்முனை வலயப் பாடசாலைகளின் உலக சமாதான தினம் இன்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார, போசனை, சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கல்முனை வலயத்திலுள்ள 65 பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விப் பணிப்பாளர்கள் எனப் பெருந் தொகையானோர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
உலக சமாதானத்தைப் பேணும் வகையிலான பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மாணவர்களால் மேடையேற்றப்பட்டன. இதே வேளை உலக சமாதானத்தை வலியுறுத்தும் பொருட்டு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து கொண்ட சமாதான ஊர்வலங்களும் இடம்பெற்றன.
இவை அனைத்திலும் மிக விருப்போடு கலந்து கொண்ட சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பரிசில்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை வழங்கி கௌரவித்தார்.