Advertisement

Main Ad

(படங்கள்) சம்மாந்துறையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து மா பெரும் பொதுக் கூட்டம். மழையினையும் பொருட்படுத்தாது பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



சம்மாந்துறையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று (28-12-2014)  ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் ஹசன் அலி,தொழில் அதிபர் ரமீஸ் ஆகியோர் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு பொது வேட்பாளர் மைத்திரி பால சிறி சேனா , ஐ.தே.க இன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, ஐ.தே.க இன் தேசிய அமைப்பாளர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனா ரத்ன மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, அ.இ.ம.கா இன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியபதி கலப்பதி, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே  என பலரும் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். இந் நிகழ்விற்கு மழையினையும் பொருட்படுத்தாது பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை