Advertisement

Main Ad

கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வநதபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - கல்முனை சந்தாங்கேணியில் நேற்று (27) மாலை இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் றணில் விக்ரம சிங்க தெரிவித்தார். (படங்கள்)

(எஸ்.அஷ்ரப்கான்)



 
இலங்கையில் வாழும் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களானாலும் சரி நாங்கள் இனவாதத்துக்கு இடமளிக்க மாட்டோம் நமது தேசியக்கொடியில் சிங்களவர்களை மட்டுமல்ல தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச அவர்களால் ஏற்படுத்த முடியாது போன இன ஐக்கியத்தை மைத்திரி பலசிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்த உள்ளோம் என கல்முனை சந்தாங்கேணியில் நேற்று (27) மாலை இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் றணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபாரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி றஸாக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மேலும் அங்கு உரையாற்றும்போது

இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றக்கூடிய உரிமை இருக்கவேண்டும் அதற்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்க முடியாது. மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரையும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம்

இந்நாட்டு மக்களுக்கு தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆங்கிலத்தையும் பாவிக்க முடியும். அதேபோன்று தான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும். அதன் மூலம் இலங்கையர் என்ற உரித்துரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ் முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையையும் சிங்களவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினையையும் தீர்ப்போம்.

பச்சைத் தண்ணியை குடித்துக்கொண்டு பஸ்ஸில் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்றும் அதற்குப் பதிலாக அதிக டொலர்களை செலவு செய்யக் கூடியவர்களே தங்களுக்குத் தேவை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்காக கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்ததாகவும் வாக்கு போடும்படியும் கூறுகின்றார்.  கடுமையாக உழைத்து  கஷ்டப்பட்டவருக்கு  எட்டாம் திகதிக்குப்பிறகு வீட்டிற்கு ஓய்வெடுக்க அனுப்ப உள்ளோம்.

என்னால் 2005ம் ஆண்டில் தன்னால் முடியாமல் போனதை 2015 ஆண்டில் செய்துகாட்டுவேன். எமது கைகள் களங்கமில்லாதவை. எனவே எமக்கு எந்த விடயத்தையும் சிறந்த முறையில் செய்து கொடுக்கும் தைரியம் இருக்கின்றது.

இந்த கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வநதபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கல்முனையில் புதிய நகர் உருவாக்கப்படும் அத்துடன் கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும். கல்முனையை பாரிய நகரமாக மாற்றுவோம் தேவையான காணிகளைப் பெற்றுத்தருவோம் அதனோடு இணைந்ததாக அம்பாறை விமானநிலையத்தையும் ஒலுவில் துறைமுகத்தையும் பிரதான துறைமுகமாக மாற்றி அமைப்போம். விமானம் இறங்குகின்ற விமான நிலையங்களைத்தான் நாம் அமைப்போம்.

இன்று நாட்டில் பசி, பட்டினி, பொருட்களின் விலையேற்றம் என்று நாடே பெரும் அவஸ்தைப்படுகின்றது. ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டும் பெரும் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள். இது எந்தவகையில் நியாயம். இதனை மாற்றியமைத்து சிறந்த ஒரு நாட்டையும்இ மக்களின் பல்வேறு தேவைகள் சிறப்பாக  நடைபெறவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

கல்முனை சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றப்படும். அதற்காக இப்பிராந்தியங்களில் தொழில் பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். கல்முனை நவீன சந்தை, மாநகர சபை மற்றும் பல்வேறு விடயங்கள் எங்களால் கவனத்தில் கொள்ளப்படும்.

பச்சைத் தண்ணியை குடித்துக்கொண்டு பஸ்ஸில் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.  அதற்குப் பதிலாக அதிக டொலர்களை செலவு செய்யக் கூடியவர்களே எங்கள் நாட்டிற்குத் தேவை.

மஹிந்த ராஜபக்ச அவர்களால்
LLRC கொண்டுவரப்பட்டது. அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவரால் காத்திரமான எந்த நிவாரணத்தை வழங்க முடிய வில்லை. பின்னர் அரசியலைக் கொண்டு செல்ல இனவாதத்தைக் கையிலெடுத்தார். மதவாதத்தைத் தூண்டினார் அதனுடாக ஒவ்வொரு மதவழிபாட்டுத் தலங்களையும் தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். தமிழ் முஸ்லிம்களைத் தாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சித்தார்.

இதனால்தான் தமிழ் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது இன்று பெரும்பான்மையான மக்களும் மைத்திரி மைத்திரி என்று எமது பக்கம் வந்த கொண்டிருக்கின்றனர்.

இதனை நிரூபிக்க எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி மைத்திரி தலைமையிலான அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் பேசும் சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.