Advertisement

Main Ad

(படங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்தர ராசபக்சவின்அரசியில் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு..

-அஸ்ரப் ஏ சமத்-




 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்று காலை 10.30 மணிக்கு தாருஸ்சலாமில் ஜனாதிபதி மஹிந்தர ராசபக்சவின் ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக்கொண்டும் எதிர்கட்சி பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேற்படி மைத்திரியின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் எமது கோரிக்கை பற்றிய விடயமாக ரணில் விக்கிரமசிங்கவிடமும் பேசியவுள்ளதாகவும் எதிர்காலத்திலும் எவ்வாறு செயற்படுவது பற்றி கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் 163 பிரதேச மாநகர சபை உறுப்பிணர்கள், 6 மாநகரம பிரதேச சபைகளின் ஆட்சி காங்கிரசில் மேல்மாகணத்தில் 2 உறுப்பிணர்கள் மத்திய வடமத்திய 2 வடக்கு 1 மத்தியமாகாணம் 1 கிழக்கு 7 மாகணசபை உறுப்பிணர்கள் உள்ளனர். மொத்தம்  13 மாகாணசபை உறுப்பிணர்கள் 8 பாராளுமன்ற உறுப்பிணர்கள் உள்ளனர் இவர்கள் அணைவரும் சேர்ந்து இம்முடிபை எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைவர்களுக்கு கட்டுப்பாட்டு இந்த முடிபை அறிவித்துள்ளதாக தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி, அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, மற்றும் அமைச்சர்கள் சுசில் பிரேம்ஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா டலகஸ் அழகப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தும் இந்த நாட்டின் அரசியலமைப்பு 17வது சர்த்து அமுல்படுத்துதல் , மற்றும் இதற விடயங்கள் பேச்சுவார்ததை முடிவின்றியே இருந்தது.