சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தினால் சமுர்த்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நலன்புரிக்
கொடுப்பனவுகள் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு நலன்புரிக் கொடுப்பனவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நலன்புரி நிதியத்தில் அங்கத்தவராக
உள்ள ஒருவரின் இயற்கை மரணத்திற்கான கொடுப்பனவு முன்னர் 25000 ரூபா
வழங்கப்பட்டது. தற்போது இக்கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர் ஒருவர் தற்கொலை செய்தால் அவருக்கு கொடுப்பனவு எதுவும் முன்னர்
வழங்கப்படவில்லை. தற்போது தற்கொலை செய்தால் அவருக்கான கொடுப்பனவு 25000
ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவரின் திருமணமாகாத பிள்ளை மரணித்தால் முன்னர் 5000 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இது 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவரின் பிள்ளையை முதலாம் ஆண்டுக்கு பாடசாலையில் அனுமதிப்பதற்கு
முன்னர் 500 ரூபா வழங்கப்பட்டது. தற்போது இக்கொடுப்பனவு ஆயிரம் ரூபுhவாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர் ஒருவரின் அவசர இடர் கொடுப்பனவாக முன்னர் ஆயிரம் ரூபா
வழங்கப்பட்டது. இக்கொடுப்பனவு 2000 ரூபாவாக அதிகரிக்கக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 7
நாட்களுக்கு மேல் இருந்தால் ஒரு நாளுக்கு 200 ரூபா வீதம் ஒரு மாதத்திற்கு
வழங்கப்பட்டது.
தற்போது இக்கொடுப்பனவு 3 நாட்களுக்கு அல்லது அதற்கு மேல் வைத்தியசாலையில்
தங்கியிருந்து சிகிச்சை பெறும் அங்கத்தவருக்கு நாளொன்றுக்கு 500 ரூபா
வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சைக்கான கொடுப்பனவை போதுமான அளவு
பெறமுடியும்.
இது தவிர ஏற்கனவே இக்கொடுப்பனவு வழங்கப்பட்ட ஏனைய விடயங்களுக்கான அதே
கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக முன்னர் அங்கத்தவர்
ஒருவரிடமிருந்து மாதாந்தம் 50 ரூபா மாத்திரம் அறவிடப்பட்டு வந்தது. தற்போது
மே மாதத்திலிருந்து இதற்காக அங்கத்தவர் ஒருவரிடமிருந்து 150 ரூபாவை அறவிட
தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
