Advertisement

Main Ad

ஆண் புடையனை கொன்றவரை பெண் புடையன் பழி தீர்த்தது


sainthamaruthu RINSATH

ஆண் புடையன் ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில்அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை - உக்குவலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
 
உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
 
அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
 
குறித்த மரண விசாரணையில்,மேற்படி நபர் மதுபோதையில்இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒருசோடி புடையன் பாம்பை வேறு படுத்திப் பிரித்து தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றதையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் குறித்த நபரை விரட்டி விரட்டி தீண்டியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.