Advertisement

Main Ad

யாழ்ப்பாண கோடைத் திருவிழா, அழகு ராணிப் போட்டி! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத்தில் ஐங்கரன் மீடியா, தமிழ் எப்.எம் (tamil FM), ஃபெயார் அன்ட் லவ்லி (fair and lovely)அனுசரனையின் நேற்று, நேற்றுமுந்தினம் ஆகிய தினங்களில் கோடைத்திருவிழா என்ற பெயரில் கார்னிவெல் நடாத்தப்பட்டது.

இறுதி நாளான நேற்றைய தினம் (20.04.2014) யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் கலாநிதி.என்.யோகராஜன் அவர்களின் அழைப்பை ஏற்ரு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.




இந் நிகழ்வில், நாட்டுக்கு சேவை செய்த ஊடகவியளாளர்களுக்கு கௌரவ பட்டங்கள் பிரதம விருந்தினர் அவர்களால் வழங்கப்பட்டது. முதல் நாள்  கார்னிவெல் இல் பிரதம விருந்தினராக இலங்கை சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ பண்டு பண்டார நாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு அவரால் சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், வைத்தியர்கள் ஆகியோருக்கு கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் என்.யோகராஜன் அவர்களுக்கு “விஷ்வ கீர்த்தி” எனும் விருது வழங்கப்பட்டது.

இரவு நிகழ்வாக யாழ்ப்பாண இளம் பெண்கள் பங்குபற்றிய அழகுராணிப் போட்டி இடம்பெற்றது. இந் நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இந் நிகழ்வில் இசைக் கச்சேரிகளும் நடாத்தப்பட்டன.

யாழ்ப்பாண கோடைத் திருவிழாவில் இடம்பெற்ற, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற தென்னிலங்கை அழகிகள் பங்குபற்றிய எலிபன்ட் கிறீம் புரொமோஷனல் பாடல் வீடியோ உங்களுக்காக…