Advertisement

Main Ad

குர்ஆன் தொடர்பில் பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்கின்றோம். – தவ்ஹீத் ஜமாஅத். (SLTJ)

இலங்கை நாட்டில் இனவாதத்தை பரப்பி வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் அண்மையில் புனித வேத நூலான குர்ஆனை இழிவு படுத்தி பேசியது தொடர்பில் தாம் விவாதிக்க தயாராக இருப்பதாக ஊடக அறிக்கை விடுத்துள்ளார்.
bbs-debateஞானசார தேரர் குர்ஆனை விமர்சித்த அடுத்த கனமே இது தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்கவும், குர்ஆன் இறைவனின் வேதம் என்பதை நிரூபிக்கவும் தயார் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் TNL தொலைக் காட்சி சேவைக்கு அனுப்பி வைத்த பகிரங்க கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தது.
(விவாத அழைப்பைப் பார்வையிட இங்கு க்லிக் செய்யவும்)
எனினும் விவாதத்திற்கு அழைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிப்பது பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் கடிதத்திற்கு பதில் தராமல் போலி விவாத அழைப்பை ஊடகங்கள் வாயிலாக பரப்ப முயலும் பொது பல சேனாவினதும், அதன் செயலாளர் ஞானசார தேரரினதும் குர்ஆன் பற்றிய விவாத அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது.
விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் நம்முடன் விவாதிக்க வருவதை விடுத்து, கண்டவர்களையும் விவாதத்திற்கு அழைக்கும் பொது பல சேனாவும் அதன் செயலாளரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் குர்ஆன் தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா? என்பதே நமது கேள்வியாகும்.