அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிட்டது.
இதன்போது, நுகர்வுக்குப் பொருத்தமற்ற சுமார் 12,000 ஒன்றரை லீற்றர் குடிநீர் போத்தல்களும், சுமார் 25,000 அரை லீற்றர் போத்தல்களும், குடிநீர் நிரப்புவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 05 இலட்சம் வெற்றுப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குடிநீர் போத்தல்களில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது தொழிற்சாலையில் இருந்த போத்தல்களில் நிரப்பப்பட்ட நீரில் மண்ணெண்னை வாசம் வீசியதாக அமைச்சு தெரிவித்தது.
குடிநீருடன் மண்ணெண்ணெய் கலப்படம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, வர்த்தக சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் தயாரிப்பான குடிநீ்ர் போத்தல்களை சந்தையிலிருந்து நீக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்தது.
