கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று (22) மாலை ருஹிணு குமாரி ரயிலை பயணிக்க
விடாது வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்த ரயில் ஊழியர்களை தடுக்கும் பணியில்
பொலிஸார் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் இரத்தக்
காயங்களுக்கு உள்ளானார். அவர் சாதாரண பொது மகன் என தெரியவருகிறது. ரயில்
மறிப்புடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

