Advertisement

Main Ad

மட்டக்களப்பில் வெள்ளையாக மாற முற்பட்டதன் விளைவு....இரு மாணவிகள் நஞ்சருந்தி தற்கொலை

 
இரண்டு மாணவிகளுக்கிடையில் இடம் பெற்ற புரிந்துணர்வற்ற நகைச்சுவை உரையடல் இருவரும் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு மாறியுள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

 இரண்டு பேரில் ஒருவரின் முகம் வெள்ளையாக மாறிவருவதனை அவதானித்து வந்த மற்றயமாணவி நகைச்சுவையாக பலபேர்களுக்கு மத்தியில் கிறீம் பூசியதனலேயே அவளின் முகம் வெள்ளையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.  இதனை அவமானம் எனக்கருதிய அம் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நஞ்சருத்தி இருந்தார்.

 இதனை கேள்வியுற்ற மற்றய மாணவி பயத்தின் காரணமாக தனக்கு ஆபத்து வரக்கூடும் எனக் கருதி தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் வீட்டுக்குள் தூக்கிட்டு தொங்கியுள்ளார். தூக்கில் தொங்கிய மாணவியினை அவரின் சாகோதரன் வீட்டின் ஓட்டை உடைத்து உள்சென்று தொங்கிய மாணவியினை காப்பற்றியுள்ளார்  நஞ்சருந்திய மாணவியை அவரின் உறவினர்கள் இனங்கண்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவை சம்மந்தமான மேலதிக விசாரணைகள் ஏறாவூர் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.