வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலையில் தொழில்புரியும் குறித்தபெண் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் குளிக்கச் சென்றபோதே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
