MOHAMED RINSATH
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் சுமார் 360 மில்லியன்
ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அஷஃரப் ஞாபகார்த்த நூலகம் மற்றும்
வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடத் தொகுதி என்பன இன்று
ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வினால திறந்து வைக்கப்பட்டன.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோருடன் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடம் மற்றும் நவீன நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்த ஜனாதிபதி அவற்றை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் நூதன சாலையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் பேரம் பேசும் சக்தியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.