Advertisement

Main Ad

ஜனவரி 30 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் ..?

 ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30 ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15 ம் நாளுக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

எனினும், 2016 ம் ஆண்டு வரை அதிபர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

எனினும், ஐ. நா விசாரணைகளை முன்வைத்து அரசியல் நலனை அறுவடை செய்வதற்காக தேர்தலை, மகிந்த ராஜபக்ச அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.