Advertisement

Main Ad

பெண்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளுக்கு எவ்வாறு தீர்வைப்பெறுவது

இன்று பல்வேறு பட்ட பிரட்சினைகளுக்கு பெண்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இருந்து பெண்களை எவ்வாறு நல்வழிப்படுத்த முடியும் என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரிஸ்வானுல் ஜன்னாஹ் ஹாரீஸ் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் (2014-04-29)இன்று மாலை சாய்ந்தமருது வீச் பார்க்குக்கு அருகில் இருக்கும் மீனவர் கட்டிடத்தொகுதியில் பெண்களை தெளிவூட்டும்  நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W. அப்துல் கFப்பார் அவர்கள் கலந்து கொண்ட அதேவேளை சமூகவைத்திய வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே.எம். ஹசன் அவர்களும் கலந்து கொன்டனர்.
இங்கு மகளிர் சங்கங்களின் இருந்து அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.