Advertisement

Main Ad

உலகம் பலவிதம் கடலில் மூழ்குவதற்கு முன்பு டைட்டானிக் பயணி எழுதிய கடிதம் $1.21 கோடிக்கு ஏலம்



லண்டன் : பிரபலமான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்பாக அதில் இருந்த பயணி ஒருவர் கடைசியாக எழுதிய கடிதம் ஒன்று ரூ.1.21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பல் டைட்டானிக், கடந்த 1912ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நடுக்கடலில் பனிப்பாறை மீது கப்பல் மோதியதில் அதில் பயணம் செய்த 1500 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அப்போது உலகம் முழுவதும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் டைட்டானிக் கப்பலை வைத்து பல ஹாலிவுட் படங்கள் வெளிவந்து சக்கை போடு போட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இந்த கப்பலை அப்படியே தத்ரூபமாக உருவாக்கி எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனையை படைத்தது. பல ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

இத்தனை பிரபலமான டைட்டானிக் கப்பலில் 2ம் வகுப்பில் பயணம் செய்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எஸ்தர் ஹார்ட் என்பவர் அதிசயமாக உயிர் தப்பினார். கனடாவில் வசிக்க குடும்பத்துடன் சென்ற போதுதான் கப்பல் மூழ்கியது. இதில் எஸ்தரின் கணவர் உயிரிழந்து விட்டார்.கப்பலில் பயணம் செய்த போது எஸ்தர் ஹார்ட் தனது தாய்க்கு எழுதிய கடைசி கடிதத்தில் தனது மகள் ஈவா கடல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக எழுதியிருந்தார். பின்னர் இந்த கடிதம் மீட்கப்பட்டு ஹென்ரி ஆல்ட்ரிட்ஜ் என்பவருக்கு கிடைத்தது. இதுகுறித்து ஹென்ரி கூறுகையில், Ôகப்பல் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இரவு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது அந்த கடிதம் ஏலம் விடப்பட்டதுÕ என்றார்.