Advertisement

Main Ad

700 பேருக்கு எலிக்காய்ச்சல்; கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 73 பேர் பாதிப்பு!



இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 73 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரிலும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் எலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 700 பேர் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பபட்டிருப்பதாகவும் தொற்று நோய் தடுப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் எனவே எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் சுகாதாரப் பகுதியினரும் இணைந்து செயற்படுமாறும் சுகாதார திணைக்களம் மாவட்ட அலுவலகம் ஊடாக அறிவித்துள்ளது.
மினுவாங்கொடை, மீரிகம, திவுலுப்பிட்டிய, வெயாங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் பல பேர் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.