Advertisement

Main Ad

கல்முனை பஸ் நிலையத்திலுள்ள சட்ட விரோத கடையை அகற்றியது மாநகர சபை!

கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத கடை அறையொன்று கல்முனை மாநகர சபையினால் இன்று புதன்கிழமை மாலை உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கல்முனை பிரதான பஸ் நிலைய கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் மாநகர சபையின் அனுமதியின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கடையறை அமைக்கப்பட்டிருந்தது. 
இது தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் உத்தரவின் பேரில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபை வேலைப் பிரிவினரால் இந்த சட்ட விரோத கடையறை அகற்றப்பட்டது.