Advertisement

Main Ad

புத்தளத்தில் மின் சூறாவளி; 23 வீடுகள் சேதம்



புத்தளத்தில் மின் சூறாவளி; 23 வீடுகள் சேதம்புத்தளத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவளியால் 23 வீடுகளும்,  06 மீன்பிடி படகுகளும் சேதமடைந்துள்ளன.
ஆனமடுவ பகுதியில் மினி சூறாவளியால் நான்கு வீடுகள் முற்றாக  சேதமடைந்துள்ளதுடன், 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆராச்சிகட்டு பகுதியில் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
மேலும் கல்பிட்டி கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 06 மீன்பிடி படகுகளும், மினி சூறாவளியினால் சேதமடைந்துள்ளன.
இவற்றில் 05 படகுகள் பகுதியளவிலும், ஒரு படகு முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
புத்தளத்தில் ஊடறுத்து வீசிய சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.