Advertisement

Main Ad

தென்கொரிய கப்பல் மூழ்கும் தருணத்தில் தம்மை காப்பாற்றுமாறு தொலைபேசியில் அழைத்த மாணவர்கள்


தென்கொரிய கப்பல் மூழ்கும் தருணத்தில் தம்மை காப்பாற்றுமாறு தொலைபேசியில் அழைத்த மாணவர்கள்தென்கொரிய கடற்பரப்பில் கப்பல் அனர்த்திற்கு உள்ளானது  தொடர்பில் முதன் முதலாக மாணவரொருவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்திலிருந்து தம்மை காப்பாற்றுமாறு தொடர்ந்து சுமார் 20 தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாகவும் தென்கொரிய பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் இருந்து நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
339 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 476 பேருடன் பயணித்த கப்பலிலிருந்து இதுவரை 113 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பலரது சடலங்கள் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கப்பலின் சிற்றுண்டிச்சாலைக்கு செல்வதற்கான பாதையை ஏற்படுத்த சுழியோடிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் அளவுக்கு அதிகமாக சாய்ந்துவிட்டதால் தம்மால் உயிர்காப்பு படகுகளை அனுப்ப முடியாமல் உள்ளதாக பாதுகாப்பு படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
46 உயிர்காப்பு படகுகளில் 2 படகுகள் மாத்திரமே இதுவரை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.