மத்தியமுகாம், 12 ஆம்; கிராமம், கமுஃசதுஃ
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு க.பொ.த சா.த
பரீட்ச்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத்தந்த மாணவ மாணவிகளையும்
கற்பித்த ஆசிரியர்களையும் வழிநடாத்திய அதிபரையும் பாராட்டி கௌரவிக்கும்
நிகழ்வு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பட்டில் சனிக்கிழமை பாடசாலை
கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவரும் வடமத்திய மாகாண உதவிக் கல்விப்
பணிப்பாளர ஏ. முஹம்மத் நௌசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம
அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம்,
கௌரவ அதிதிகளான சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்.
எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, எச்..எம்.எம். ஜாபீர,; சிறப்பதிதியாக
பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். யூசுப், பாடசாலை அபிவிருத்திச் சங்க
உறுபிபினர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





