Advertisement

Main Ad

சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்படுமா?



சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்படுமா?இந்தியன் பிறிமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத் தலைவராக இருந்த குருநாத் மெய்யப்பன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டக்காரர்களுக்கு தகவல்களை வழங்கியமை தொடர்பான சூதாட்ட விசாரணையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகத் தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது.
170 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ள, இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழு,
குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை, குருநாத் மெய்யப்பன் மறுத்துள்ளார்.
குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைசெய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக அதிகாரி என்ற வகையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அணியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய சூதாட்ட மோசடி விவகாரத்தை அடுத்து, கடந்த வருடம் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments