Advertisement

Main Ad

இளையராஜாவின் மாரடைப்பிற்கு யுவனின் மதமாற்றமா காரணம்?



இளையராஜாவின் மாரடைப்பிற்கு யுவனின் மதமாற்றமா காரணம்?இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதுதான் இன்றைய பரபரப்பு செய்தி.
தன் மதமாற்றத்தை யுவன் உறுதி செய்துவிட்டாலும் அவர் எப்படி மாறினார் எதற்காக மாறினார் யாரால் மாறினார் என்பன தொடர்பில் பல்வேறு வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
குறிப்பாக தீவிர இந்து மதப் பற்று கொண்டவரும் ஆன்மீகவாதியாக அறியப்படுபவருமான இசைஞானி இளையராஜா மீது தன் மகனின் மதமாற்றம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து பல்வேறு செய்திகள் உளவுகின்றன.
அவர் மனமுடைந்து போயிருப்பதாகவும் அவருக்கு அண்மையில் ஏற்பட்ட மாரடைப்பிற்கு யுவனின் மதமாற்ற முடிவுதான் காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் யுவன் வழங்கியுள்ள செவ்வியொன்றில் தன் மதமாற்ற முடிவுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் தன் மகனின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் அளித்து அவரது முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, அண்ணன் கார்த்திக் ராஜாவும் தங்கை பவதாரணியும் ஆகியோரும் தன்னுடைய மதமாற்ற முடிவை ஏற்றுக்கொண்டிருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments